குஜராத்தில் கொரோனாவால் உயிரிழக்கும் தகன தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி!
குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழக்கக் கூடிய தகன தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனா பரவலை ஒழிக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் என அனைவருக்கும் அம்மாநில அரசு நிதி அறிவித்துள்ளது. இந்நிலையில்கல்லறைகளில் தொழிலாளர்களாக பணியாற்றக்கூடிய தொழிலாளர்களும் தற்பொழுது முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள னர்.
மேலும், கொரோனாவால் உயிர் இழக்கக் கூடிய தகன தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் 25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட கூடிய அனைத்து சலுகைகளும் இனி கல்லறைகளில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.