டிடிஎஸ் பிடித்தம் 25% குறைப்பு.! நாளை முதல் அமல்.!
டிடிஎஸ் என்ற வரி பிடித்தம் 25% குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். இதில், முதல்கட்டமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான 15 முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில், டிடிஎஸ் என்ற வரி பிடித்தம் 25% குறைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முன்கூட்டியே பிடித்தம் செய்ய வேண்டிய வரியை 25% குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மக்களிடம் ரூ.50,000 கோடி பணப்புழக்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். டிடிஎஸ் பிடித்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வியாபாரம், வேறு காரணத்திற்காகவோ ரூ.15,000க்கும் மேல் செலுத்தப்படும் தொகைக்கு வரி பிடித்தம் செய்யப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.