ஜூலை 2021-க்குள் 25 கோடி தடுப்பூசி…இவர்களுக்கு தான் முதலில் .. ஹர்ஷ் வர்தன்..!

இன்று கொரோனா மற்றும் அதன் தடுப்பூசி தொடர்பான பல கேள்விகளுக்கு மத்திய சுகாதார அமைச்சர் தனது வாராந்திர நிகழ்ச்சியான “சண்டே சம்வத்” நிகழ்ச்சியில் பேசும்போது,
ஜூலை 2021க்குள் 25 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது தடுப்பூசி தயாரான பிறகு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் நியாயமாகவும், சமமான அளவிலும் விநியோகம் செய்யப்படும் என்று கூறினார்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் இந்த இலக்கை அடைய மத்திய அரசு இரவும், பகலும் உழைத்து வருவதாக ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். 40 முதல் 50 கோடி தடுப்பூசி பெற்ற பின்னர் அதைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இதில், சுகாதார ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இந்த சுகாதார ஊழியர்களில் பட்டியலில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவர்கள், ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025