வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் – குடியரசுத் தலைவர்..!

Murmu

குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து நாளை மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உரையாற்றுகிறார்.

நாடாளுமன்ற பணியாளர் செங்கோலை ஏந்தியபடி செல்ல குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் நாடாளுமன்றம் வந்தார். அதன்படி புதிய நாடாளுமன்றத்தில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு ” நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மண்ணால் உருவானது புதிய நாடாளுமன்றம்,  புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என முழுமையாக நம்புகிறேன்.

பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சி, அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த கருத்துடன் பட்ஜெட் கூட்டு தொடரில் செயல்படுவார்கள் என நம்புகிறேன். சிறப்பு வாய்ந்த புதிய நாடாளுமன்ற கட்டத்தில் உரையாற்றுவது பெருமிதம் என முர்மு தெரிவித்தார். புதிய கட்டிடத்தில் நமது ஜனநாயக, நாடாளுமன்ற மரபுகளை  மதிப்போம் என்று உறுதிமொழி உள்ளது.

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அறிவித்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுக்கிறது.  எவ்வளவு இடர்பாடுகள் இருந்தாலும் இந்தியா தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்கிறது. கடந்த ஆண்டு பல வரலாறு சாதனைகளை இந்திய படைத்துள்ளது.கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகில் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக மாறி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 2 காலாண்டுகளாக 7.5 சதவீதத்திற்கு மேல் உள்ளது.

தேர்தலுக்கு பின் பாஜக அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும்… பிரதமர் மோடி!

ஒரு லட்சத்திற்கு அதிகமான தொழில் முனைவோரை மத்திய அரசு உருவாக்கியது.  15 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.  வறுமையின் பிடியிலிருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.  உலக அளவில் இந்தியாவின் வங்கித்துறை கட்டமைப்பு மிக சிறந்து விளங்குகிறது. மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசு தொடர்ந்து முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. பல சர்வதேச விளையாட்டு தொடர்களில் இந்திய வீரர்கள் முத்திரை பதித்துள்ளனர். ராமர் கோயில் கட்ட வேண்டுமென்று பல நூற்றாண்டுகளாக இருந்த ஆசை இன்று நிறைவேறியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் அமைந்தது பெருமிதத்திற்குரியது” என தெரிவித்தார்.  ராமர் கோவிலை பற்றி அறிவிப்பை பாஜக உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்