10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.! நிர்மலா சீதாராமன்.!
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடர் , தேர்தல் சமயம் என்பதால் குறுகிய கால பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இடைக்கால பட்ஜெட் தாக்கல்… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரை!
மீண்டும் பாஜக :
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அனைவருக்குமான ஆட்சி. அனைத்து துறை முன்னேற்றத்தையும் கொண்டுள்ள ஆட்சி. இந்த ஆட்சி அடுத்த முறையும் (2024 மக்களவை தேர்தல்) தொடரும் என நம்பிக்கை உள்ளதாக கூறினார். செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதுவரை இல்லாத வளர்ச்சி :
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் வீடு, குடிநீர் ஆகியவை கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மத்திய அரசு. 2047இல் புதிய இந்தியாவை படைப்போம். அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வளர்ச்சி இருக்கும்.
வளர்ச்சி அடைந்த இந்தியா :
மக்களுக்கு தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 1.1 கோடி இந்தியர்கள், திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளனர். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு 2027இல் நனவாகும்.
சமூக நீதி :
சுய தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் மூலம் வேலை வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. சமூக நீதியே மத்திய அரசின் பிரதான நோக்கம். தேசிய கல்வி கொள்கை நாட்டின் கல்வி துறையில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளளது என தனது உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார் . அதனை அடுத்து பட்ஜெட் பற்றிய விவரங்களை அறிவித்து வருகிறார்.