சண்டிகரில் 25 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு..!
சண்டிகரின் 25 பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 10,000-க்குள் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழ்நாடு, கேரளா,மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மட்டும் 80% பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா தலைநகர் சண்டிகரில் கொரோனா வழக்குகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சண்டிகரின் 25 பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோலி அன்று சண்டிகரில் 274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் 149 ஆண்களும், 125 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 26,468 பேரில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2,746 கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மேலும், 23,345 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இதுவரை 377 பேர் இறந்துள்ளனர்.
Chandigarh administration declares 25 areas in the UT as containment zone, in wake of increasing #COVID19 cases. pic.twitter.com/SfsQQztMts
— ANI (@ANI) March 30, 2021
சுகாதாரத்துறை இதுவரை 3,08,086 பேரின் கொரோனா மாதிரி மூலம் சோதனை செய்துள்ளது. இவர்களில், 2,80,594 பேரின் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.