மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 25% சலுகை -IndiGo அறிவிப்பு.!
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது. இந்த வைரஸ் கட்டுக்குள் கொண்டு வர அணைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் தினம் தினம் போராடி வருவதை நாம் பார்க்கிறோம்.
இந்நிலையில், இந்தாண்டு இறுதிவரை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 25 சதவீதம் விமான கட்டண சலுகை அளிப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிர்த்து போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இண்டிகோ இந்த கட்டண சலுகை வழங்குகிறது என குறிப்பிடத்தக்கது.