மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி மோசடி.! 25 வயது இளைஞர் கைது.!
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செயலாளர் என கூறி ஒரு இளைஞர் ராஜஸ்தானில் உள்ள தொழிலாளர் அமைச்சர்களை ஏமாற்றி உள்ளதாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள தெஹ் முண்டாவர் எனும் ஊரில் வசிப்பவர் சந்தீப் சவுத்ரி. 25 வயதான இவர் அங்குள்ள ஓர் இரு சக்கர வாகன கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த வேலையை அண்மையில் இழந்துள்ளார்.
பின்னர், தனக்கு வேலை இல்லாததால், வேலை கிடைப்பதற்காக தான் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தனிப்பட்ட செயலாளர் என கூறிக்கொண்டு அதனை பயன்படுத்தி ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் உள்ள தொழிலாளர் அமைச்சர்களிடம் தன்னை வேலைக்கு அழைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனை அறிந்த மத்திய உள்துறை அமைச்சகம் புகார் அளித்ததன் பெயரில், குற்றப்பிரிவு போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.