உத்தரப்பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர், சுரங்க அதிகாரியிடம் ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தற்போது அந்த எம்எல்ஏ தலைமறைவாகியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் மணல் வெட்டியெடுக்கும் சுரங்கம் உள்ளது. இங்கு சைலேந்திர சிங் என்பவர் சுரங்க அதிகாரியாக இருக்கிறார். பாந்தா மாவட்ட சுரங்கத்தில் மணல் வெட்டி அள்ளும் பணியின்போது அவ்வப்போது வெடிகுண்டுகளும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தச் சுரங்கத்திற்கு, 30-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் சென்ற, அந்த தொகுதியின் பாஜக எம்எல்ஏ பிரஜேஷ் குமார் பிரஜாபதி, மண் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் வெடிகுண்டு பயன்படுத்தக் கூடாது என்பதால், இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க, தனக்கு மாதம் ரூ. 25 லட்சம் பணம் தரவேண்டும் என்று கூறி அதிகாரியை மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுரங்க அதிகாரி சைலேந்திர சிங், பணம் கேட்டு எம்எல்ஏ மிரட்டியது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த எம்எல்ஏ பிரஜாபதி, தற்போது தலைமறைவாகி இருக்கிறார்.
DINASUVADU
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…