கர்நாடகாவில் 24×7 ஹோட்டல், கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க அனுமதி.!

கர்நாடகாவில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் 10 பணியாளர்களுக்கு மேல் கொண்ட கடைகள், ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணிநேரமும் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி,
கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை வேலைவாய்ப்பை உருவாக்குவதையும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட் 10 மணி நேரத்தை தாண்டக்கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஊழியரை ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது என்றும் மாநில அரசு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தது ஒரு வார விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்றும் ஒரு ஊழியரை ஒரு நாளில் எட்டு மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யச் செய்தால், அவர்களுக்கு கூடுதல் சம்பளத்தை வழங்கப்பட வேண்டும் எனவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 1962 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025