நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இன்று முதல் 24 மணிநேரமும் (ஆர்.டி.ஜி.எஸ்) வசதியை வழங்க ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த சேவை டிசம்பர் இன்று இரவு மதியம் 12:30 மணி முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இந்த அம்சத்தைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
வங்கிகளில் அதிக மதிப்பிலான பணம் பரிவர்த்தனைக்கு ஆர்டிஜிஎஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வங்கி வேலை நாள்களில் குறிப்பிட்ட கால அளவில் மட்டுமே இந்த பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். தற்போது, வங்கிகளில் RTGS பரிவர்த்தனை 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளைத் தவிர மாதத்தின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆர்டிஜிஎஸ் உதவியுடன் நிதி மாற்றப்படுகிறது.
இந்நிலையில் நிதிக் கொள்கையை மறு சீராய்வு அறிக்கையில், ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனையை வங்கி வாடிக்கையாளர் 24 மணி நேரமும், 7 நாட்களும் மேற்கொள்ளும் வசதி செயல்பாட்டுக்கு வரும் என ரிசர்வ் வாங்கி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, நேற்று ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், கொரோனா காலத்தில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதனால், ஆர்.டி.ஜி.எஸ் நேரத்தை நீட்டிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்திருந்தது.
அதன்படி, ஆர்டிஜிஎஸ் வசதியை 24 * 7 மணி நேரம் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனை முறை. இதன் மூலம் பணம் மிகக் குறுகிய காலத்தில் மாற்றப்படுகிறது. RTGS மூலம் பெரிய தொகையை மாற்ற பயன்படுத்தப்படுகிறது. இதன் கீழ் குறைந்தபட்சம் ரூ .2 லட்சம் அனுப்பலாம். அதிகபட்ச தொகையை 10 லட்சம் ரூபாய் அனுப்புவதற்கான வரம்பு உள்ளது.
ஆர்டிஜிஎஸ் மூலம் 2 லட்சத்திலிருந்து 5 லட்சத்திற்கு நிதி மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக ரூ.4.5 கட்டணமும் , 5 லட்சத்துக்கும் அதிகமான நிதி பரிமாற்றத்திற்கு வங்கி அதிகபட்சமாக ரூ.49.5 கட்டணம் வசூல் செய்யப்படும் என கூறப்படுகிறது.
RTGS கடந்த 26 மார்ச் 2004 அன்று தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் 4 வங்கிகள் மட்டுமே இந்த சேவையுடன் பயன்படுத்தினர். ஆனால் இப்போது நாட்டில் சுமார் 237 வங்கிகள் இந்த முறையின் மூலம் தினசரி ரூ.4.17 லட்சம் கோடி பரிவர்த்தனைகளை செய்கின்றனர். நவம்பரில், ஆர்டிஜிஎஸ்ஸிலிருந்து சராசரி பரிவர்த்தனை தொகை ரூ.57.96 லட்சம் ஆகும்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…