மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி..24 மருந்துகளுக்கு தடை நீக்கம் – மத்திய அரசு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் எதிர்கால மருந்து தேவையை புரிந்து சில மருந்துகளுக்கு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது. இதனால் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்நிலையில், 24 மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது. அதாவது டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின் பிஐ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை நீக்கப்படுகிறது என்றும் இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என தகவல் கூறப்படுகிறது. மேலும் பாராசிட்டமால் மருந்து ஏற்றுமதிக்கான தடை மட்டும் நீக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.