டெல்லியில் சாகர்பூர் பகுதியில் வசித்து வரக்கூடிய 24 வயது பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், அந்த பெண் தனது குழந்தைகளுடன் வெளியில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் கத்தியால் குத்தி அவரை கொலை செய்துள்ளதாகவும், உயிரிழந்த பெண்ணின் பெயர் ஆர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பெண் உடல் தீன்தயாள் உபாத்யா மருத்துவமனையில் அனுப்பப்பட்ட போது, அவர்கள் இறந்து விட்டதாக உறுதி செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் மதியம் 2 மணியளவில் நடந்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும், உயிரிழந்த ஆர்த்தி எனும் பெண்ணை கொலை செய்த நபர் அவரது அண்டை வீட்டாராக ஒரு காலத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அண்டை வீட்டில் வசித்து வந்தவர் தான் வேறொரு இடத்திற்குக் குடி பெயர்ந்து உள்ளதாகவும், அவர் தான் இந்த கொலையை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…