பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு 24 மணி நேர உதவி எண்ணை தேசிய மகளிர் ஆணையம் செயல்படுத்தியுள்ளது.
தேசிய மகளிர் ஆணையம் பெண்களின் நலனை வலுப்படுத்தும் விதமாக 7827170170 என்ற 24 மணி நேர உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி சுபின் ராணி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களுக்கு தேவையான உதவியை பெறுவதற்கு இந்த எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காவல்துறை, மருத்துவமனைகள், மாவட்ட சட்டச் சேவை ஆணையகம், உளவியல் சேவைகள் ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் அவர்களால் தொடர்பு கொள்ள முடியும்.
மேலும் இதனை துவங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளதாவது, இந்த மின்னணு உதவி எண் பெண்கள் பாதிக்கப்படும்பொழுது அரசு ஆதரவளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக கூறினார். பெருந்தொற்று காலத்தில் தேசிய மகளிர் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…