சட்டமானது குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா…! ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
- சட்டமானது குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா
- கூச்சல் , கண்டனங்களுக்கு இடையே ராஜ்யசபாவிலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.இந்த குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 பேர் வாக்களித்தனர்.பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.இந்நிலையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.