23 லட்ச ரூபாய் மருத்துவ பாக்கியுடன் அரபு நாட்டில் சிக்கி தவித்து வரும் வேலையிழந்த இளைஞர்.!

Default Image

 மேற்கு வங்கத்தை சேர்ந்த 27 வயதான பத்ரா எனும் இளைஞர் ஐக்கிய அரபு நாட்டுக்கு (சவூதி அரேபியா ) வேலைக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் வேலை இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டோம் என்பதும் அவர் அந்நாட்டில் தரையிறங்கிய போதுதான் பத்ராவுக்கு தெரியவந்தது.

அதன்பிறகு அவருக்கு வீட்டு வேலை கிடைத்தது. ஆனால் அங்கும் சரியான வருமானம் இல்லாமல் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே தரப்பட்டதாக பத்ரா அந்நாட்டு செய்தி சேனலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு நீரிழிவு நோய் காரணமாக அவரது நிலை மிகவும் சிக்கலானதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்து முடிக்கப்பட்டது.

தற்போது அந்த மருத்துவமனையில் அந்நாட்டு மதிப்பில் 112,000 திராம்ஸ் (இந்திய மதிப்பில் கிட்டதட்ட 23 லட்சம் ரூபாய்) கட்ட வேண்டி உள்ளதாம். மேலும், அவருக்கான விசா கடந்த பிப்ரவரி மாதம் முடிந்து விட்டதாம். இதனால் அந்த பாக்கி தொகையை கட்ட முடியமால் தனியார் மருத்துவமனையில் சிக்கி தவித்து வருகிறாராம். தான் இந்தியாவிற்கு வர விரும்புவதாகவும் அதற்கு அரசு உதவ வேண்டும் எனவும் பத்ரா அந்நாட்டு செய்தி சேனலில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்