டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 630 பேர் கைது

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது.
இந்நிலையில் டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 148 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.