இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 332,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,263,695, உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 24,28,778 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 13,648,159 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,86,928 ஆக உயர்ந்துள்ளது
மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட பத்து மாநிலங்கள் ஒரு நாளில் பதிவுசெய்யப்பட்ட புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 75% ஆகும் என்று சுகாதார அமைச்சகம் ஒரு நாள் முன்பு தெரிவித்திருந்தது .
தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.53 கோடியைத் தாண்டியுள்ளது, இதில் கடந்த 24 மணி நேரத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 வரை கொரோனாவுக்கு க்கு 274,445,653 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, வியாழக்கிழமை மட்டும் 1,740,550 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு 26,000 க்கும் மேற்பட்டவர்கள் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர் 306 பேர் உயிரிழந்துள்ளனர். . இதற்கிடையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 67,013 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் 568 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்கள் மகாராஷ்டிரா (4,094,840), கேரளா (1,322,054), கர்நாடகா (1,109,650), தமிழ்நாடு (962,935), ஆந்திரா (942,135), உத்தரப்பிரதேசம் (976,765) மற்றும் டெல்லி (956,765) ஆகியவையாகும்.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…