22 யூடியூப் சேனல்கள் முடக்கம்..! மத்திய அரசு அதிரடி..!
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் செல்போன் உபயோகிக்கின்றனர். அந்த வகையில், இந்த போன் மூலமாக பலரும் இன்று அதிகமாக யூடியூப் செயலியை தான் உபயோகப்படுகின்றனர். இதன்மூலம், தங்களுக்கு தேவையானவற்றை வீடியோவாக பார்த்து கற்றுக் கொள்கின்னார். ஆனால், இந்த யூடியூப் மூலம் சில தேவையற்ற வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது.
22 யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 18 இந்திய யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.