தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.
தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக்கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம். தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகக் கூறி பாஜக நிர்வாகி பொதுநல வழக்கு தொடுத்திருந்த நிலையில், அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியாவின் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய பேரரசர் ஷாஜகானால் கடந்த 1632-இல் கட்டப்பட்ட நிலையில், உலக அதியங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகிறது. இந்த சமயத்தில், தாஜ்மஹால் கட்டடம் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது என்றும் இந்த நிலம் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் கையகப்படுத்தப்பட்டது எனவும் ராஜஸ்தானின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி தெரிவித்திருந்தார்.
மேலும் கூறுகையில், ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. தாஜ்மஹாலில் ஏன் பல அறைகள் பூட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல அறைகள் அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளன, கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதனிடையே, தாஜ்மஹாலில் இந்து சிலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பூட்டியுள்ள 22 அறைகளை திறக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க நிர்வாகி டாக்டர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் அறைகளை திறக்க முடியாது என கூறி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…