பாகிஸ்தான் மீனவர்கள் 22பேர் கைது! 79 படகுகள் பறிமுதல்.!
எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), குஜராத்தில் 22 பாகிஸ்தான் மீனவர்களைக் கைது செய்து, 79 மீன்பிடி படகுகளைக் கைப்பற்றியது.
குஜராத்தின் புஜ் செக்டாரில் உள்ள க்ரீக்ஸ் மற்றும் ஹராமி நல்லா ஆகிய இடங்களில், எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் அத்துமீறி நுழைந்த 22 பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்துள்ளனர் மற்றும் 79 படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். குஜராத் பிஎஸ்எஃப் (BSF) இன் சாதனைகளை வெளிப்படுத்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி குஜராத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை பிஎஸ்எஃப், குஜராத்தின் கடலோர மற்றும் எல்லை பகுதியில் இருந்து ரூ.250 கோடி மதிப்புள்ள 50 ஹெராயின் பாக்கெட்டுகள் மற்றும் ரூ.2.49 கோடி மதிப்புள்ள 61 போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.