மத்தியப்பிரதேசம்:22 பேர் உயிரிழக்க காரணமான,அஜாக்கிரதையாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தின் சட்டாபூரில் இருந்து பன்னாவுக்கு புறப்பட்ட தனியார் பயணிகள் பேருந்தில் 40 பேர் பயணம் செய்த நிலையில்,ஓட்டுநர் சம்சுதீன் என்பவர் பேருந்தை அதிவேகமாக இயக்கி உள்ளார்.இதனால்,அச்சமடைந்த பயணிகள் மெதுவாக பேருந்தை இயக்குமாறு கூறியும் அவர் கேட்கவில்லை. இதன்காரணமாக,மால்டா மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபதுக்குள்ளனது. இதனால், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 22 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆனால்,பேருந்து கட்டுபாட்டை இழந்த சமயத்தில்,ஓட்டுநர் சம்சுதீன் வெளியே குதித்து தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில்,அவசர கால வழியை இரும்பு கம்பிகளால் அடைத்து,அதற்கு பதிலாக கூடுதல் இருக்கை பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதன்பின்னர்,ஒட்டுநர் சம்சுதீன் மற்றும் பேருந்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.
இந்நிலையில்,சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கில் ஓட்டுநர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மத்தியப்பிரதேச உள்ளூர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டுள்ளது.மேலும்,பேருந்து உரிமையாளர் கஜேந்திர பாண்டேவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயணியின் உயிரிழப்புக்கும் என 19 வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் வீதம் ஓட்டுநர் சம்சுதீனுக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பொதுவாக,விபத்தை ஏற்படுத்திய ஒரு ஓட்டுநருக்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…