கர்நாடகாவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை புறக்கணித்த 20,000 மாணவர்கள்..!
கர்நாடகா மாநிலத்தில் நேற்று தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 20,994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரி ஒன்றில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை தற்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. அதே சமயம் ஹிஜாப் தொடர்பான சர்ச்சைகளும் பல இடங்களில் வெளிவருகின்றன. கர்நாடகாவில் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹிஜாப் சர்ச்சையில் அனைவரும் சீருடை அணியும் விதியை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கிடையில், நேற்று கர்நாடகா மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கின. 10ஆம் வகுப்பு இறுதித் தேர்வு ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று நடந்த தேர்வை எழுத 8.74 மாணவ-மாணவிகள் தேர்வுக்கு ஆஜராகினர். ஆனால் 20,994 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. ஹிஜாப் தடை காரணமாக முஸ்லிம் மாணவிகள் பலர் தேர்வுக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் எத்தனை பேர் முஸ்லிம் மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவில்லை.
ஹிஜாப் மற்றும் ஆடை கட்டுப்பாடு தொடர்பான விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும். பெண்கள் ஹிஜாப் அணியாமல் தேர்வெழுத வேண்டும் என கர்நாடக உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.