இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடி ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .நேற்று அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, அமைச்சர்கள் வரவேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் ட்ரம்புக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவியுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே ஆலோசனை நடைபெற்றது.இதில் ட்ரம்ப் மற்றும் மோடி முன்னிலையில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.இந்தியா அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவின் அப்பச்சி ,ரோமியோ ஹெலிகாப்டர்கள் ராணுவ ஆயுதங்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…