கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட 21 வயது இளைஞன் – 39 வயது நபர் கைது!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் எனும் மாணவர் கனடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மேலாண்மை படிப்பு பயின்று வந்த நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக இவர் சுரங்கப்பாதை ஒன்றின் வழியாக செல்லும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கனடா பாதுகாப்பான இடமென்று மகன் கூறியதாகவும், மகனின் மரணத்திற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை எனவும் உயிரிழந்த கார்த்திக்கின் தந்தை வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் கனடாவில் ரிச்சர்ட் ஜொனாதன் எட்வின் எனும் 39 வயது நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.