குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட இருபத்தி ஒன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதத்தை விட அதிக வீதத்தை கொண்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட மத்திய அமைச்சின் தகவல்கள் படி, இந்தியாவில், நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.73 லட்சமாக உயர்ந்தது, இறந்தவர்களின் எண்ணிக்கை 19,268 ஆக உயர்ந்தது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மத்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியால் நேற்றுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,09,082 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் குணமடைந்தவர்கள் தேசிய சராசரியான 60.77 சதவீதம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேசிய சராசரியை விட கொரோனாவால் குணமடைந்தவர்களின் விகிதத்துடன் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன.
அதன்படி, சண்டிகர் (85.9 சதவீதம்), லடாக் (82.2 சதவீதம்), உத்தரகண்ட் (80.9 சதவீதம்), சத்தீஸ்கர் (80.6 சதவீதம்), ராஜஸ்தான் (80.1 சதவீதம்), மிசோரம் (79.3 சதவீதம்), திரிபுரா ( 77.7 சதவீதம்), மத்தியப் பிரதேசம் (76.9 சதவீதம்), ஜார்க்கண்ட் (74.3 சதவீதம்), பீகார் (74.2 சதவீதம்), ஹரியானா (74.1 சதவீதம்), குஜராத் (71.9 சதவீதம்), பஞ்சாப் (70.5 சதவீதம்), டெல்லி ( 70.2 சதவீதம்), மேகாலயா (69.4 சதவீதம்), ஒடிசா (69.0 சதவீதம்), உத்தரபிரதேசம் (68.4 சதவீதம்), இமாச்சலப் பிரதேசம் (67.3 சதவீதம்), மேற்கு வங்கம் (66.7 சதவீதம்), அசாம் (62.4 சதவீதம்), மற்றும் ஜம்மு-காஷ்மீர் (62.4 சதவீதம்)
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…