இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் கைது என்கவுண்டர் செய்தனர்.இந்நிலையில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்களை உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்ற வகையில் ஒரு புதிய சட்ட மசோதாவை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார்.
பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டபட்டவரின் மீதான வழக்கு ஒரு வாரத்திற்குள் விசாரிக்கப்படும் .விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாற்றப்பட்டவருக்கு 21 நாள்களில் தூக்கு தண்டனை வழங்க புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது.சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.மேலும் பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு எந்த காவல் நிலையத்திலும் வேண்டுமெனாலும் புகார் கொடுக்கலாம் என்ற ZERO FIR உள்ளிட்டவை இந்த மசோதாவில் உள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…