வன்கொடுமை செய்பவர்களுக்கு 21 நாட்களில் தூக்கு .! புதிய சட்ட மசோதா ஒப்புதல்.!

Default Image
  • பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்க  ஒரு புதிய சட்ட மசோதாவை ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார்.
  • இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பல நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயற்சி செய்தபோது போலீசார் கைது என்கவுண்டர் செய்தனர்.இந்நிலையில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்களை உடனடியாக தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்ற வகையில் ஒரு புதிய சட்ட மசோதாவை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்து உள்ளார்.

பாலியல் வன்கொடுமை குற்றம்சாட்டபட்டவரின் மீதான வழக்கு ஒரு வாரத்திற்குள் விசாரிக்கப்படும் .விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாற்றப்பட்டவருக்கு 21 நாள்களில் தூக்கு தண்டனை வழங்க புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது.சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று ஆந்திர சட்டப்பேரவையில் இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.மேலும் பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு எந்த காவல் நிலையத்திலும்  வேண்டுமெனாலும் புகார் கொடுக்கலாம் என்ற ZERO FIR உள்ளிட்டவை இந்த மசோதாவில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்