21 நாட்கள் ஊரடங்கு: இவர்கள் மட்டும்தான் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும்- மோடி!
பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே வானொலியில் உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அதனால் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.
மேலும், இந்த 21 நாட்கள் ஊரடங்கில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படும். இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவின்போது மருத்துவ பணியை மேற்கொள்ளபவர்கள் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வருமாறு, மற்ற யாரும் வெளியே வரவேண்டாமென பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.