2027 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு முஸ்லீம் நாடாக மாறிவிட கூடாது கலக்கத்தில் ஹிந்து யுவ வாஹினி…!
தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக வேண்டி தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிரான அச்ச உணர்வை இந்துக்கள் மனதில் உருவாக்குவதும் இந்துக்களின் ரட்சகனாக தங்களைக் காட்டிக் கொண்டு இந்துக்களின் வாக்கு வாங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் இப்போது ஒரு புதிய வதந்தியை பரப்பி வருகின்றன. ஹிந்து யுவ வாஹினி என்ற அமைப்பு “இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் 2027 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு முஸ்லீம் நாடாக மாறிவிடும் என்றும் இதனை தடுப்பது நமது கடமை என்றும் ஒரு செய்தியைப் பரப்பி வருகிறது. அனைத்து இந்துக்கள் மதியிலோம் இந்த செய்தியை கொண்டு செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வதந்திக்கு ஆதாரமாக எந்த புள்ளி விபரத்தையும் அந்த அமைப்பு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.