2024 நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகக் கடுமையாக இருக்கும் – ராகுல் காந்தி
2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என ராகுல் காந்தி பேட்டி.
நான் களத்தில் இருந்து நேரடியாக பார்க்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன், வரும் நாடாளுமன்ற தேர்தல் பாரதி ஜனதா கட்சிக்கு மிகக் கடுமையாக இருக்கும் என இந்திய ஒற்றுமை பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் களத்தை சரியாக புரிந்து கொண்டால் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பது மிக சுலபம். வெறுமனே பாஜகவை எதிர்க்காமல் நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டத்துடன் பாஜகவை எதிர்க்க வேண்டும். அப்படி நிகழ்ந்தால் பாஜக வெற்றி பெறுவது கடினம்.
பாஜகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காண முடிகிறது என கூறினார். மேலும், மக்களிடம் நேரடியாக சென்று பேச விரும்புவதால் குண்டு துளைக்காத காரில் செல்ல முடியாது. காரில் அமர்ந்தபடி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வர செல்ல முடியாது என பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சிஆர்பிஎப், டெல்லி போலீஸ் புகார் தெரிவித்த நிலையில், ராகுல் காந்தி விளக்கமளித்தார்.