2024ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

NobelPrize

டெல்லி : ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசு யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது என்பதற்கான விவரத்தை ‘நோபல் அசெம்பிளி’ (Nobel Assembly) அறிவித்து வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே, 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. அந்த விருதானது அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக, இயற்பியலுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது என்பதற்கான விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இருவரும் செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததால்அவர்ளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனை படைக்க ஓடிக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் சாதனையாகவே வாழ்ந்துகொண்டு இருக்கும் இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும், கெஃப்ரே இ. கிளிண்டன் கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ளனர். மேலும், நோபல் பரிசு வெற்றியாளர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்