2022 ஆம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்: பிரதமர் மோடி
புதுடில்லி : 2022 ஆம் ஆண்டிற்குள் நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என மாநில தலைமை செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். திட்டங்களின் செலவுகள் அதிகரித்து வருவதாகவும், அதனால் மத்திய அரசின் திட்டங்கள் தாமதமாவதை நாட்டு மக்கள் மறந்து விடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டு நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர். அதற்குள் அனைத்து துறைகளும், தங்களின் துறைகளில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் திட்டங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அனைத்து மாநில தலைமை செயலாளர்களும் செம்மையாக செயல்பட்டு, அனைத்து வணிகர்களையும் ஜிஎஸ்டி.,யின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ள செய்ய வேண்டும் என்றார். ஆகஸ்ட் 15ஆம் தேதியை இலக்காக எடுத்துக் கொண்டு அதற்குள் ஜிஎஸ்டி பதிவு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அடுத்ததும் bjbதான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லாமல் சொல்லிருக்கிறார்`