2021 – ஆம் ஆண்டு பத்ம விருது – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கல்!
2021 ஆம் ஆண்டுக்கான 119 பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார்.
டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் 2021 ஆம் ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான இந்த பத்ம விருதுகள், மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளாக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டு வழங்கப்படக்கூடிய 119 பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்குகிறார். இந்த பட்டியலில் 7 பத்மவிபூஷன் விருதுகளும், 10 பத்மபூஷன் விருதுகளும், 102 பத்மஸ்ரீ விருதுகளும் இடம் பெற்றுள்ளன.