2021ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில்….மன்னார்குடி ஜீயர் சுவாமிகள்….!!
2021ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் வரும் 2021 டிசம்பருக்குள் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்றார். தாய் மதத்திற்கு திரும்புவர்களை வரவேற்க தயாராக இருப்பதாக கூறிய ஜீயர், சிலை திருடர்களை கண்டுபிடிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் மீண்டும் நியமிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்.
dinasuvadu.com