2020-ம் ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என டாடா குழும தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதிலும், தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பொருளாதார வீழ்ச்சி, பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய குறைப்பு, மாணவர்களின் கல்வி பாதிப்பு என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, டாடா குழுமத்தின் தலைவரான, ரத்தன் டாடா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ இந்த ஆண்டு அனைவருக்கும் ஏதோ ஒரு இடத்தில் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என்றும், இணையதளத்தில் ஒருவருக்கொருவர் புண்படுத்தப்படுவதையும், ஒருவரையொருவர் வீழ்த்துவதையும் நான் காண்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என்றும், டாடா தனது ஆன்லைன் இருப்பு மட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் இது அனைவருக்கும் பட்சபாதம் இல்லாமல், அனைவர்க்கும் ஆதரவின் இடமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒருவரை பார்க்கும் போது, கருணை, அதிக புரிதல் மற்றும் பொறுமை அதிகம் தேவை.’ என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…