இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கிய நிலையில் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
2020-2021-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்கள், நிதி ஆயோக் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.பின்னர் பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா நிகழ்வு டெல்லியில் உள்ள நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார்.அல்வா வழங்கிய நிலையில் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்புப்பணி தொடங்கியது.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் திறந்த மனதுடன் விவாதிக்க தயார் என்று பேசினார்.இதையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது.பின்பு மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.எனவே 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு (பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…