#2019 RECAP: முதல் ரஃபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைப்பு .!

- முதல் ரஃபேல் விமானம் டசால்ட் நிறுவனத்திடமிருந்து அக்டோபர் 8 -ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
- நான்கு போர் விமானங்கள் 2020 மே மாதமும், மீதமுள்ள விமானங்கள் 2022க்குள் இந்தியா வந்தடையும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
பாஜக அரசானது 2014-ம் ஆண்டு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கபோவதாக அறிவித்திருந்தது. இந்த விமானத்தின் உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக ஏற்கனவே போர் விமானங்களை தயாரித்து வரும் ஹிந்துஸ்தான் நிறுவனத்திடம் கொடுக்காமல், புதியதாக தொடங்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இந்த ரக விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணி கொடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் மிகுந்த சர்ச்சையை கிளப்பியது.
தற்போது முதல் ரஃபேல் விமானம் பிரான்ஸ் நாட்டிலுள்ள டசால்ட் நிறுவனத்திடமிருந்து அக்டோபர் 8 -ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கடுத்து, நான்கு போர் விமானங்கள் 2020 மே மாதமும், மீதமுள்ள விமானங்கள் 2022க்குள் இந்தியா வந்தடையும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025