காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த நிலையில்,காஷ்மீர் மறுவரையரை சட்டம் கடந்த அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது .அக்டோபர் 31 -ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் தனி யூனியனாகவும், லடாக் தனி யூனியனாகவும் செயல்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு கிரிஷ் சந்திரா மர்மு, லடாக்கிற்கு ஆர்.கே. மாத்தூர் ஆகியோர் துணை நிலை ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனையடுத்து இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மேலும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக உதயமாகியதால் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 28 -ஆக குறைந்துள்ளது.யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7 -லிருந்து 9 -ஆக உயர்ந்துள்ளது.
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…