#2019 RECAP : 106 நாட்கள் திகார் சிறையில் இருந்த சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான ப .சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ ,அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து .சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ முயற்சித்தனர். ஆனால் சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்த நிலையில் ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தனர். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு சிபிஐ தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ஆனால் அதே விவரத்தில் அமலாக்கத் துறையும் கைது செய்து இருந்ததால் அவர் திகார் சிறையில் தொடர்ந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது .அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இதன் பின்பு சிதம்பரம் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த நிலையில் வெளியே வந்தார்.