Categories: இந்தியா

2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் : சவ்கதா ராய்..!

Published by
Dinasuvadu desk

மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

இந்த விவாதத்தில் பங்கேற்காமல் சிவசேனா கட்சியும், பிஜு ஜனதா தள கட்சியும் வெளியேறியது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.அதில் நாடாளுமன்றத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு செய்துள்ளது.

இத்தகவலை மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்த் குமார், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் குழந்தைத்தனமானதாக உள்ளது, என விமர்சித்த அமைச்சர் அனந்த் குமார், அவர் முதிர்ச்சி இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது, என்றும் கடுமையாக விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது.இது தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.

பிரதமர் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்னை பார்க்க தவிர்க்கிறார் அவர் 15 லட்சம் மற்றும் 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக சொல்லி அனைவரையும் ஏமாற்றிவிட்டார் .இது மட்டுமில்லை பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக கூற வேண்டும் என்று ஆக்ரோஷமாக தெரிவித்தார்.

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன தேசத்துக்கு எதிராக மட்டுமல்ல, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது .பின்னர் அவையில் பேசிக்கொண்டே இருந்தவாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியின் அருகில் சென்று அவரை கட்டிப் பிடித்தார்.இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

மேலும் அதிக விலை கொடுத்து போர் விமானங்களை மோடி அரசு வாங்குவதாகவும் இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சவ்கதா ராய், தேர்தலில் ஒத்தைக்கு ஒத்தை மோதினால் பாஜக தோல்வியை மட்டுமே தழுவும் என தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சவ்கதா ராய் பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் மீதும், கூட்டணி கட்சிகள் மீதும் பா.ஜ.க நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கடுமையான வீழ்ச்சியை சந்தித்தாகவும், கர்நாடகவிலும் தோல்வியை தழுவியதாகவும் தெரிவித்த அவர், வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க நிச்சயம் தோல்வியை தழுவும் எனவும் தெரிவித்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

1 hour ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

2 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

2 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

2 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

2 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

3 hours ago