2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இவர்தான் போட்டியிட வேண்டும் என மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மக்களவை தேர்தலில் அத்வானி குஜராத், காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு பின் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார். அவர் எந்த விழாவிற்கு சென்ற போதும் பாஜகவினர் அவரை பெரிதாக மதிக்கவில்லை. மேலும் கட்சியிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை. அத்வானியை போலவே பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்நிலையில் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலின் போது இது தளர்த்தப்பட்டு முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த கடந்த இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும் பல்வேறு காரணங்களால் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிவ சேனா ஆகியவை பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என அறிவித்து விட்டன.
இநிலையில் டெல்லியில் அத்வானியை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்து தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் நெருக்கடியில் உள்ள பாஜக, அத்வானி, மற்றும் ஜோஷி ஆகிய மூத்த தலைவர்கள் போட்டியிடும்போது வெற்றி வாய்ப்புகள் சாதகமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…