2018-19-ம் ஆண்டுக்கான டெல்லி அரசின் பட்ஜெட் அறிவிப்பு!
2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை டெல்லி அரசு அறிவித்துள்ளது.டெல்லி நிதியமைச்சர் மணிஷ் சிசோடியா வெளியிட்ட பட்ஜெட்டில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் டெல்லியில் ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,மாநகராட்சிகளில் சிறிய சாலைகளைச் செப்பனிடும் பணிக்கும் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஒவ்வோர் அரசுப் பள்ளியிலும் தலா 200 முதல் 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் வருகையைப் பதிவிட ஆசிரியர்களுக்கு டேப்லட் கணினிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.