2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டிற்கான 53,000 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட்டை, டில்லி துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா தாக்கல் செய்தது.
ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் தந்திரமான வரவு செலவு திட்டத்தை ஆத்ஆத்மி தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ளதாக துணைமுதல்வர் தெரிவித்துளளார்.
மேலும், பட்ஜெட் குறித்து பேசிய துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா, இது ஆம்ஆத்மி அரசின் முதன்முதலான பசுமையான பட்ஜெட் என்று தெரிவித்துள்ள துணைமுதல்வர், நகரத்தில் மாசுக்களை கட்டுப்படுவதில் அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது என்று கூறினார்.இந்த பட்ஜெட்டில், மாநிலத்தின் சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி மற்றும் நீர் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாகவும், மாநிலத்தின் போக்கு வரத்து, மின்சாரம், சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை போன்ற 26 துறைகளுடன் இணைந்து மாசுக்கு எதிராக ஒருகிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.மேலும் மாநிலம் முழுவதும், நகராட்சி உள்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில்சி சாலைகள் பழுது மற்றும் பராமரிப்பிற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று துணைமுதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறினார்.டெல்லி அரசின் கடந்த ஆண்டு ரூ.44,370 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலை யில், இந்த ஆண்டு 53000 கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டை விட 19.45 சதவிகிதம் அதிகம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…