2018 காமன்வெல்த் போட்டி: தங்க வேட்டையில் இந்தியா…!மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்று சாதனை …!
மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்றார். 65 கிலோ எடைப்பிரிவு இறுதியாட்டத்தில் வேல்ஸ் வீரர் கேன் சாரிக்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் ((Tejaswini sawant)) தங்கப் பதக்கம் வென்றார்.இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் அஞ்சும் மாட்கில் (Anjum Moudgil) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீர அனீஷ் பன்ஸ்வாலா (Anish Bhanwala) தங்கப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் தங்கப்பதக்கம் வென்றார். 65 கிலோ எடைப்பிரிவு இறுதியாட்டத்தில் வேல்ஸ் வீரர் கேன் சாரிக்கை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இன்று வென்ற நான்கு பதக்கங்களுடன் சேர்த்து இதுவரை 17 தங்கம், 8 வெள்ளி 10 வெண்கலப் பதக்கங்கள் என 34 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.