2018 காமன்வெல்த் போட்டி:தொடர் தங்க வேட்டையில் இந்தியா …!மேலும் இரண்டு தங்கபதக்கம் வென்று இந்தியா சாதனை …!
ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக் மற்றும் மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினீஷ் போகத் தங்கம் வென்றனர்.
ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நகரில் 2018ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் தொடர்ந்து தங்கப்பதக்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது. ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக் மற்றும் மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினீஷ் போகத் தங்கம் வென்றனர்.
இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 15 வெண்கலம் பதக்கங்களை வென்றுள்ளது பெற்று 3வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.