2018 காமன்வெல்த் போட்டி:இந்தியாவுக்கு ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்கள்…!
இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் காமன்வெல்த் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டு நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மகளிருக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த இந்தியாவின் தேஜஸ்வினி சாவந்த் ((Tejaswini sawant)) தங்கப் பதக்கம் வென்றார்.
இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் அஞ்சும் மாட்கில் (Anjum Moudgil) வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 25 மீட்டர் துப்பாக்கி சுடும் பிரிவில் இந்திய வீர அனீஷ் பன்ஸ்வாலா (Anish Bhanwala) தங்கப் பதக்கம் வென்றார்.
இன்று வென்ற மூன்று பதக்கங்களுடன் சேர்த்து இதுவரை 16 தங்கம், 8 வெள்ளி 10 வெண்கலப் பதக்கங்கள் என 34 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.