2018 கர்நாடகா தேர்தல்:619 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள அமைச்சர்! வேட்பு மனு தாக்கல்!
தனக்கு 619 கோடி ரூபாய்க்குச் சொத்துக்கள் உள்ளதாக , கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமார் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். கர்நாடக மின்துறை அமைச்சர் சிவக்குமார் ராமநகர மாவட்டத்தில் உள்ள கனகபுரா சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
அவர் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள உறுதிமொழிப் பத்திரத்தில் தன் பெயரில் 70கோடியே 94லட்ச ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும், 548கோடியே 85லட்ச ரூபாய்க்கு அசையாச் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
101கோடியே 77லட்ச ரூபாய் கடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மனைவி உஷா பெயரில் 112கோடி ரூபாய்க்குச் சொத்துக்கள் உள்ளதாகவும், மகள் ஐஸ்வர்யா பெயரில் 108கோடி ரூபாய்க்குச் சொத்துக்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.