2018காமன்வெல்த் போட்டி: ஒரேநாளில் 8வது தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது இந்தியா!மொத்தம் 25 தங்கப் பதக்கம்…!
75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் விகாஷ் கிருஷன் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய வீரர், வீராங்கனைகளின் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது.இன்றைய போட்டியில் குத்துச்சண்டையில் மேரி கோம் தங்கம் வென்றுள்ளார். அவரைத் தொடர்ந்து ஆண்களுக்கான 49 கிலோ குத்துச்சண்டை போட்டியில் அமித் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புட் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து 52 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி தங்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். அவர் 86.47 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து பதக்கம் வென்றார்.குத்துச்சண்டையில் இந்திய வீரர் மணிஷ் கவுசிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். மகளிர் 62 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கல பதக்கம் வென்றார்.ஆண்கள் 125 கிலோ பிரிவு ஆண்கள் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுமித் தங்கப்பதக்கம் வென்றார். மகளிர் 50 கிலோ மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றார்.மகளிர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.75 கிலோ குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் விகாஷ் கிருஷ்ணன் தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்கள் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிசில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் மற்றும் சனில் சங்கர் ஷெட்டி ஜோடி வெண்கல பதக்கம் வென்றது.75 கிலோ எடைப்பிரிவில், இந்திய வீரர் விகாஷ் கிருஷன் தங்கப் பதக்கம் வென்றார்.இன்று ஒரே நாளில் 8 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியா, 25 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலத்துடன், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.