2017-18ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31..!
2017-18ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 31ஆம் தேதிக்குள் செலுத்தினால், அபராதம் ஏதுமில்லை என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் வரி செலுத்தும் வகையில் வருமானம் ஈட்டியவர்கள், அபராதம் இன்றி வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்ய ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்திற்குள் வருமான வரியை செலுத்தாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்றும், கடந்த நிதியாண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டியவர்கள், வரும் ஜூலை மாதத்திற்கு பிறகு கணக்கைத் தாக்கல் செய்தால் அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை டிசம்பர் மாதத்திற்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தால், அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ள வருமான வரி அதிகாரிகள், ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் என்றும் தெரிவித்துள்ளனர்.